
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், , தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா, ரஷ்யாவைச் சேர்ந்த என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு நடிகர் வெங்கடேசுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர், அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது நடிப்பில் வரும் 27ம் தேதி தொடங்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக பாலகிருஷ்ணாவுடன் 'கவுதம புத்ர சட்டகர்னி', 'பைசா வசூல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.