
நாமக்கல் மாவட்டம் பழைய பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி. அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இதை அவர் வீட்டிற்க்கு தெரியாமல் மறைத்துவிட்டார். இதனால் அந்த மாணவியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதானதால் தந்தைக்கு சந்தேகம் வந்துள்ளது.

இது குறித்து தந்தை மாணவியிடம் கேட்ட போது, நான் இந்த பகுதியில் உள்ள ஒருவரை காதலித்தேன் இதனால் கர்ப்பமடைந்தேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை கர்ப்பம் ஆகி 8 மாதம் ஆகிவிட்டதால் கருவை கலைக்க முடியாது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் அவரே மகளுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அவளுக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் அங்குள்ள சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் திடீரென அந்த மாணவிக்கு ரத்த போக்கு ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சுகாதார துறையினரும், காவல் துறையினரும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் கூறியுள்ளனர்.