மீண்டும் களத்தில் இறங்கிய நடிகை..! நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டார்..!!திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த ரம்பா தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. அர்ஜூன், விஜய், பிரபுதேவா, முரளி உள்பட பல மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவ்வளவு ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து என்ற படத்தில் நடித்துள்ளார்.கார்த்தி நடித்த என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாக உழவன் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், சிவசக்தி, தர்மசக்கரம், ராசி, விஐபி, காதலா காதலா, ஒரு காதலன் ஒரு காதலி, பெண் சிங்கம் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, பெங்கால், கன்னடம் என்று பல மொழிகளில் வலம் வந்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் வலம வந்தார்.


இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு கனடாவில் குடிபெயர்ந்தார். இதையடுத்து, முழுவதும் குடும்ப வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்ட ரம்பா சினிமாவைவிட்டே விலகினார். அதன் பிறகு குடும்ப தகராறு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். இது குறித்து ரம்பா கூறுகையில் திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த எனக்கு இப்போது நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே மீண்டும் நடிக்கமுடிவு செய்து நல்ல கதைக்காக காத்துயிருந்தார்.திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. ஏற்கனவே நடிகை குஷ்பு, நதியா என்று முன்னணி நடிகைகளை வைத்து படங்கள் எடுத்துள்ளார் என்பதால் திரிவிக்ரம் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். ஜூனியர் என்.டி.ஆருடன் ஏற்கனவே நாகா, எமதுங்கா ஆகிய படங்களில் டான்ஸ் ஆடிய அனுபவம் மட்டும் இருக்கிறது. இது போன்று நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Previous Post Next Post