இந்து கடவுளை அசிங்க படுத்திய ஆஸ்திரேலியா..! (படங்கள் )


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் "ரோஸ்மவுண்ட் ஆஸ்திரேலியன் பேஷன் வீக்" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதனை பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான "லிசா புளூ" ஏற்பாடு செய்திருந்தது.

அந்நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அணிந்து கொண்டு, அழகிகள் ஒய்யார நடைபோட்டு வந்தனர். அதில் ஒரு அழகியின் நீச்சல் உடையில் "இந்து கடவுளான லட்சுமியின்" உருவம் பதிவுள்ளனர்.


உள்ளாடைகளில் இந்து கடவுள் மேல் சட்டை, கால் சட்டை இரண்டிலும் லட்சுமியின் படம் இடம்பெற்றதால் இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சுமியை கடவுளாக இந்துக்கள் வணங்கி வருகின்றனர்.



அனால்' இந்து கடவுளான லட்சுமியின் உருவம் படத்தை உள்ளாடையில் பதிக்கப்பட்டிருந்தது.
அவரை கவர்ச்சியான விஷயங்களுக்கு பயன்படுத்துவது அதிர்ச்சி தருவதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஆஸ்திரேலிய கொடிகளை எரித்து, இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர்.



இதையடுத்து பைரோன் பேயை சேர்ந்த லிசா புளூ நிறுவனம் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது என்று கூறி மன்னிப்பு கேட்டா பிறகு போராட்டங்கள் கைவிடப்பட்டது.
Previous Post Next Post