நடிகரின் வலையில் சிக்கிய இளம் நடிகை

தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர், மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அந்த நாயகனின் வலையில் இளம் நடிகை ஒருவர் சிக்கியிருக்கிறாராம்.



மான் படத்தில் நடித்து பிரபலமான தங்கச்சி நடிகை, சமீபத்தில் நடனப் புயல் நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம். பெரிய பிரச்சனைக்கு பின்னர் அந்த படமும் சமீபத்தில் வெளியாகி, திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்நிலையில், நடிகைக்கும், அந்த படத்தில் நடித்த நடனப் புயல் நாயகனுக்கும் காதல் மலர்ந்துள்ளாம். பேசாத படத்தின் படப்பிடிப்பின் போது பேசியே நாயகியை உஷார் பண்ணிவிட்டாராம் நாயகன்.

இவர் இளம் நாயகி, நாயகனோ வயது அதிகமானவராச்சே என்று சிலர் கேட்க, காதலுக்கு தான் கண்ணில்லையே என்று சிலர் சொல்கிறார்களாம். ஏற்கனவே அந்த நாயகனின் வலையில் பெரிய நம்பர் நடிகை, கொளு கொளு நடிகை சிக்கி பின்னர் பிரிந்த நிலையில், இப்போது மான் நடிகையா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

இது எங்க போய் முடியப் போகுதோ தெரியவில்லை என்றும் சிலர் பீல் பண்றாங்களாம்.
Previous Post Next Post