கற்பழிக்க முயன்ற நபரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த பெண்: அடுத்து நடந்த அலற வைக்கும் சம்பவம்..?

இந்தியாவில் நடக்கும் பாலியல் சீண்டல் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.இத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

இதை எதிர்த்து எங்கு மேல் முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை, பாதிப்பிற்குள்ளான பெண்ணே அறுத்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-ல் உள்ள துர்காபூர் கிராமத்தை சேர்ந்த எட்டவா என்ற பகுதியிலுள்ள வீட்டில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.

அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய அந்த நபர் முயன்றுள்ளார்.

மிகவும் தைரியம் நிறைந்த அந்த பெண், மர்ம நபரை மடக்கி பிடித்து அடித்து உதைத்து வீட்டிலிருந்த ஒரு கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்.

பிறகு, எட்டவா காவல்துறைக்கு அப்பெண்ணே தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அவர்கள் வருவதற்கு முன்னரே அந்த நபரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்து தண்டித்துள்ளார் அந்த பெண். இந்த சம்பவம் தற்சமயம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post