
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சூடு நடந்த போது பிரபல சின்ன திரை நடிகை நிலானி என்பவர் படப்பிடிப்பில் போலீஸ் சீருடை அணிந்தவாறு, தனது உள்ள குமுறலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த காணொளியில், ''இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது எனவும், அப்பாவி போது மக்களை துப்பாக்கியால் சுட்டு சாகடித்துள்ளார்கள்.
போராட்டம் நடத்தினால் போலீசாருக்கு சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டியிருக்க வேண்டும். ஆனால் இதை யாரும் பின்பற்றாமல் பொதுமக்களை கொலை செய்துள்ளனர்''. என அந்த வீடியோ பதில் பேசியிருந்தார்.

அந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பவே, இந்த வீடியோ பதிவு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி. சீரியல் நடிகை நிலானி மீது ரிஷி என்பவர் வடபழனி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்தி வந்தனர்.
இந்நிலையில், குன்னுர் சென்றிந்த சின்னத்திரை சீரியல் நடிகை நிலானியை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். பின் அவரை சென்னை கொண்டு வந்த போலீசார், இன்று காலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவரின் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், நடிகை நிலானியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி உத்தரவிட்டனர்.