பிக்பாஸ் 2 வீட்டில் பிரபலமாகி வரும் நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் வீட்டில் கேமராவைப் பார்த்துஉன்னை மாதிரியான காதலன் தான் வேணும் என்று கூறியுள்ளார்.
"இருட்டு அறையில் முரட்டு குத்து" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் படத்தில் ஏராளமான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். தற்போது இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் யாஷிகாவுக்குத்தான் வயது குறைவு. அதனால் வீட்டில் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மற்ற போட்டியாளர்கள் சிலர் குறை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தனக்கு எப்படிப்பட்ட காதலன் வேண்டும் என யாஷிகா கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவை பார்த்து "நான் சிங்கிள் தான், எனக்கு உன்னைப் போலவே ஒருகாதலன் வேணும், எப்போவும் என்னையே சுத்தி சுத்தி பாத்துக்கிட்டிருக்க என்று கூறியுள்ளார்.