திடீர் திருப்பம்..! ''தமிழ்படம் 2.0'' படத்தின் பெயர் மாற்றப்பட்டது..!! உலகமே அதிர்ந்து போகும் அளவிற்கு காரணத்தை கூறிய படக்குழு..!!!


நடிகர் சிவா மாற்றும் ஐஸ்வர்யா மேனன் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் ''தமிழ்படம் 2.0''. இந்த படத்தின் தலைப்பை ''தமிழ்படம் ௨'' என மாற்றிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்த திடீர் முடிவுக்கு படக்குழு தெரிவித்திருப்பதாவது, ''ஜுரோவிற்கு மதிப்பில்லை என்பதால், தலைப்பில் இருந்து ஜுரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே படத்தின் தலைப்பு இனிமேல் தமிழ்ப்படம் 2 என்றே அழைக்கப்படும்'' என தெரிவித்துள்ளது.
தமிழ்ப்படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமா மற்றும் அரசியலில் நடக்கும் அட்டூழியங்களை படக்குழு அவ்வப்போது கலாய்த்து புகைப்படங்களை வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 
இந்த இடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ், சந்தான பாரதி, திஷா பாண்டே, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சேத்தன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பின்னணி இசை மற்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post