
தமிழ் படம் 2’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "காலா". இது வரும் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதன் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுயிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான சிவா நடிப்பில் உருவான "தமிழ் படம் 2" டீசர், யூ-டியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. முதல் பாகம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் கலாய்த்து வெளிவந்தது. இதனை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய தமிழ் திரையுலகம், தமிழக அரசியல் சூழல் ஆகியவற்றை எக்கச்சக்கமாக கலாய்த்து, "தமிழ் படம் 2" வெளிவருகிறது. இதனை சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார்.

இதன் டீசரில் இருந்து, விவேகம், மங்காத்தா, மெர்சல், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை கலாய்த்துள்ளது தெரிகிறது. இந்நிலையில் காலாவை பெரிதாக பேசி வந்த ரசிகர்கள், தற்போது "தமிழ் படம் 2" பக்கம் திருப்பினார்.
யூ-டியூபில் 2.8 மில்லியன் பார்வைகளைத் தாண்டி சாதனைப் பாதையில் சென்று கொண்டுயுள்ளது.