
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்டு காதல் கொண்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா,ஆரவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ஒரு சில நாட்களுக்கு பின் ஓவியா ,ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
எனவே, மனமுடைந்த ஓவியா அங்கேயே தற்கொலைக்கு முயன்று ,அங்கு இருக்க பிடிக்காமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால்,அதை பற்றி கமல் கேட்டபோது ஓவியாவுக்கு தான் மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் அவரிடம் ஒப்புக்கொண்டார்.

பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ நன் நலமாக உள்ளேன் எனக்கூறி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தார்.மேலும் நானும் ஓவியாவும் நட்புடன் பழகி வருகிறோம் என ஆரவ் கூறினார்.
இந்நிலையில், ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்று ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதைக்கண்டு அவரின் ரசிகர்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அதற்கு தங்களது கருத்துக்களை பதிவித்து வருகின்றனர்.