தற்கொலை முடிவெடுத்த பிரபல தமிழ் நடிகை!. அதிர்ச்சி காரணம்!.


தமிழ் சினிமாவில் நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, நான், இவன் வேற மாதிரி போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மிளா.

அவருக்கு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் திருமண உறவும் கசப்பாகவே அமைந்தது. இதனால் மிகவும் மனம் நொந்தார் நடிகை சார்மிளா. இது குறித்து சார்மிளா கூறுகையில், நான் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தும் எதிர்பாராத சம்பவங்கள் எனது வாழ்க்கையில் நடந்து விட்டன. இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆரோக்கியத்தையும் இழந்து மிகவும் கஷ்டப்படுகிறேன்.



தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு பிரச்சனை உள்ளது, இந்த மாதிரி விசயங்கள் என் வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்சனைக்கு முன்பே நடந்து இருந்தால் கண்டிப்பாக தற்கொலை செய்து இருப்பேன். ஆனால் இப்போது சாக முடியாது.

உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் எனது தாயாரை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தனக்கு மகன் ஒருவன் இருப்பதால் அவனுடைய நலனும் முக்கியம். அதனால் தற்கொலை முடிவை எடுக்கவில்லை என்றார்.

இப்போது பெரிய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டால் அவர்கள் எனக்கு வாய்ப்பு தர தயாராக இல்லை. எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என இயக்குனர்களிடம் கேட்கிறேன். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறியது. எனது வீட்டையும் நிலத்தையும் விற்க வைத்தனர்.

வீடு போன பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் எடை குறைந்து எனது ஆரோக்கியமே கெட்டுப் போனது இதனால் மிகவும் நரக வாழ்க்கையை அனுபவிக்கிறேன் என உருக்கத்துடன் கூறினார்.
Previous Post Next Post