பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்திருப்பவர் ஆல்யா மானசா.
மேலும் இவர் நடனம் ஆடுவதில் திறமையானவர்.மேலும் இவர் செய்த டப்ஸ்மாஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .மேலும் இதன் மூலம் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.
இந்த நிலையில் ஆலியா மானசா டிவிட்டரில் ஒரு வருத்தமான பதிவை போட்டுள்ளார் .
நேற்றுதான் நான் கடைசியாக புன்னகைத்தேன்.ஆனால் இப்பொழுது என்னை சுற்றியுள்ள சிலர் எனது சந்தோசத்தை பறித்து சந்தோசமாக உள்ளனர்.எனக்கு நல்ல வாழ்க்கையை பரிசாக கொடுத்த கடவுளுக்கு நன்றி..மேலும் சிலர் நல்லவர்களாக இல்லாததற்கு நான் கடவுளை குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார்.
அதை பார்த்த பல ரசிகர்கள், காதல் முறிந்து விட்டது என கருதி ஆறுதல் சொல்லி வருகின்றனர்.