நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..!


பாலாஜி- நித்யாவின் குடும்ப பிரச்சனையின் காரணமாக இப்போது பிக்பாஸ் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் தாடி பாலாஜி, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.
இவரது மனைவி நித்யா, இவர்களுக்கு ஏழு வயதில் போஷிகா என்ற பெண் குழந்தையும் உண்டு.
Image result for தாடி பாலாஜி செய்திபுனல்
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீட்டை மீறி பாலாஜியின் மீதான காதலால் மணமுடித்தார் நித்யா.
ஒரு மாதத்தில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானது தெரியவந்ததாம். எனினும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நித்யா, வேலைக்கு சென்று முதல் ஆறு மாதங்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாராம்.
Image result for தாடி பாலாஜி செய்திபுனல்
இப்படியோ நாட்கள் செல்ல செல்ல குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது தெரியவந்ததுடன், தன்னைப்பற்றி அவதூறாக பேச மனம் நொந்து கொண்டாராம்.
ஒருகட்டத்தில் கடந்தாண்டு மே மாதம், மாதவரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு தன் மனைவி இவ்வாறு செய்வதாகவும், குடும்பமே தனக்கு உயிர் என்றும் பேட்டி கொடுத்தார் பாலாஜி.
Image result for தாடி பாலாஜி செய்திபுனல்
எனினும் தன் முடிவை மாற்றிக்கொள்ளாத நித்யா, விவாகரத்து கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் பிக்பாஸில் இருவரும் பங்கேற்றுள்ளனர். 
பாலாஜி, நித்யாவிடம் யார் பேசினாலும் குடும்ப சண்டையை பற்றி விளக்கம் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலாஜிக்கு அறிவுரையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Image result for தாடி பாலாஜி செய்திபுனல்
குடும்ப பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டே நித்யாவின் குணம் இப்படித்தான் இருக்கும் என பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் நினைப்பதாக காட்டப்படுகிறது.
பிரபலம் என்பதற்காக நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டிய பிரச்சனையை இப்படி நிகழ்ச்சியில் காட்டுவது சரியா பிக்பாஸ் என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர்.
இதை பார்க்கும் குழந்தைகள், பெரியவர்களின் மனநிலை எப்படி இருக்கும் எனவும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.

Previous Post Next Post