மீன்களுடன் நீச்சல் உடையில் விளையாடிய இலியானா!

தமிழில், கேடி, நண்பன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை இலியானா. சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார் என்று கூறிவருகின்றனர்.



இதற்கு முக்கிய காரணம், சில மாதங்களுக்கு முன்பு இலியானா ஆண்ட்ரூ என்னுடைய கணவர் என்று இணையதளத்தில் பதிவு செய்து சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அடிக்கடி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.



இந்நிலையில் தற்போது பிக்கி தீவு பகுதிக்கு சென்றுள்ள இலியானா, நீச்சல் உடையில் கடலுக்கடியில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மீன்களுடன் இவர் விளையாடுவது போல் உள்ளது. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் 3 லட்சம் லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.
Previous Post Next Post