சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை "மைக்கேல்" என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று அவருடன் இருந்த சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 இளம் நடிகைகளையும் காவல் துறை மீட்டியுள்ளனர்.

சென்னை ஈசிஆர் சாலைகளில் நூற்றுக்கணக்கான தனியார் ரிசாட்டுகளும், சொகுசு இல்லங்களும் உள்ளதாகவும் அதில் பெரும்பாலுமான ரிசாட்டுகளில் விபச்சாரங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. கைதான சங்கீதா வாணி ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பவர் அனைவருக்கும் தெரிந்தது.

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி குழுவினர் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பாக பேசப்படுகிறது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று காவா துறை கூறுகின்றனர்.