திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமா..? அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்! ஜூலியை சர்ச்சையில் சிக்க வைத்த அந்த ஒரு புகைப்படம்..

பிக்பாஸ் புகழ் ஜுலி தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் சமூகவாசிகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமா என்று அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும், இந்த புகைப்படங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

ஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீரத்தமிழச்சி என பெயரெடுத்த ஜுலி தற்போது 'அம்மன் தாயி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் , இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள்தான் வெளியாகியுள்ளது. அதில் ஒரு புகைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது தற்போதுஜூலி கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அம்மன் தாயி படத்திற்காக அவர் கர்ப்பமாக நடித்திருக்கிறார். ஜல்லிகட்டில் கலந்து கொண்டு பிரபலமானதால் ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் கிடைத்திருந்தது.

இதில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்திருந்த நற்பெயரை அவர் கெடுத்துக்கொண்டார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் குழந்தைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக செயற்படும் ஜூலிக்கு திரைப்பட வாய்ப்புக்களும் தற்போது குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில் ,தற்போது 'அனிதா', 'அம்மன் தாயி' போன்ற படங்களில் தற்போது ஜூலி நடித்து வருகிறார்.'அம்மன் தாயி' படத்தில் நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தை தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்ட ஜூலிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.
Previous Post Next Post