ஓவியாவுக்கு பிறகு ஆர்மி எனக்கே உள்ளது! பெருமிதம் கொள்ளும் திமுக தலைவர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஓவியாவுக்கு பிறகு எனக்கு  ஆர்மி இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதில் வரும் காணொளிகளை  பார்த்திருப்பதாகவும் திமுக முதன்மை செயலர் துரைமுருகன் கூறியுள்ளார். கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், நான் சவால் விட்டது முதல்வருக்கு தானே தவிர அமைச்சரான ஓ.எஸ்.மணியனுக்கு அல்ல என்றும் குட்டி குட்டி ஆட்களுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் மக்களிடத்திலிருந்து அரசின் திட்டங்களுக்கு  எதிர்ப்பு வருவதை தவிர்க்க முடியாது. ஆண்டாண்டு காலமாக வைத்திருக்கும் நிலங்களை எப்படி எளிதில் விட்டு கொடுப்பார்கள்,   மக்களிடம் திட்டம் குறித்து அரசு தான் விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும். அதேபோல காவல்துறை வைத்து மிரட்டி நிலம் எடுப்பது முடிமன்னர்கள் காலத்தில் தான் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், தூத்துக்குடியில் பிரச்னை முடிந்த பிறகும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.,மக்கள்  தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்களை கூட, அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள் என கூறுவதால் தான், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த தயங்குகிறார்கள் என்று கூறினார்.
 காங்கிரஸ் தலைவரை பார்ப்பதாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று கூறமுடியாது. புது கம்பெனி ஆரம்பித்தால் அதனுடைய பிராண்டை விளம்பரம் செய்வது போல தான் கமல் தனது கட்சியை விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.
Previous Post Next Post