எல்லாம் வதந்தி..! அப்படி எல்லாம் ஏதும் இல்லை..!! அந்தர் பல்டி அடித்த நயன்தாரா..!!!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயமே. இவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உலவருவது வழக்கம்.
விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தை நயன்தாரா தான் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தான் அதுபோல் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
நடிகர் அதர்வா நயன்தாராவுடன், ''இமைக்கா நொடிகள்'' என்ற படத்தில் நடித்த போது, அதர்வாவின் நடிப்பும் அவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தையும் பார்த்து, நடிகை நயன்தாரா அசந்துபோய் உள்ளார்.
இதனையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''இதயம் முரளி''  என்ற படத்தில் அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதயம் முரளி படத்திற்கு நயன்தாராதான் தயாரிப்பாளர் என தகவல் பரவியது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post