பிக்பாஸ் முதல் சீசன் நடந்து கொண்டிருந்தபோதுதான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
பரபரப்பாக பேசப்பட்ட அந்த சம்பவத்தை பிபாஸ் நிகழ்ச்சியிலும் பதிவு செய்தார் கமல். வெளியில ஃபைவ் ஸ்டார் சிறையெல்லாம் இருக்கு என சசிகலாவை கிண்டலாக குறிப்பிட்டிருந்தார் கமல்.

தற்போது இரண்டாவது சீசனில், பிக்பாஸ் வீட்டுக்குள் விதிமுறைகளை மீறுகிறவர்களையும் தப்பு செய்கிறவர்களையும் தண்டிக்க சிறை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறையை பார்வையிட்டார் கமல்ஹாசன். அந்த சிறைக்குள் பார்வையிட சென்ற கமல் சிறைக்குள் மின்விசிறிகள் கூட இல்லையா, அப்போ இது ஒரிஜினல் சிறை இல்லையா எனக் கேட்டுள்ளார்.
சென்ற ஆண்டு சிறையில் சசிகலா வசதி வாய்ப்புகளை அனுபவித்ததைக் கிண்டலடித்ததை போலவே இந்த முறையும் முதல் நாளிலேயே அரசியல் நெடியுடன் கமல் பேசத்துவங்கியுள்ளார். என கூறுகின்றனர்.