மசூதில அரை நிர்வாண உடையில் இருந்த எமி ஜாக்சன்? புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டின்சன்கள்



நடிகை எமி ஜாக்சன் எப்போதும் ஆபாசமான உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவேற்றி வருகிறார். தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுவார்.

இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி போல அரபி மொழியில் எழுத்துக்கள் இருந்தன, மேலும் பார்க்கவும் அந்த இடம் மசூதி போல இருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் எமி ஜாக்சனை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். "அந்த இடத்திற்கு மரியாதை கொடுக்காமல் இப்படி பிகினியில் உள்ளீர்களே" என பலரும் அவரை திட்டினார்.

ஆனால் பின்னர் தான் தெரியவந்தது அவர் போஸ் கொடுத்தது ஒரு ஹோட்டல் அறையில் என்று. சுவற்றில் உள்ள டைல்ஸ்கள் வித்தியாசமாக அரபி எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

.
Previous Post Next Post