
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, விபச்சார வழக்கில் சிக்கியவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தெலுங்கு, தமிழ், உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். ஒரு நிலையில், இவருக்கு பட வாய்புகள் குறைந்ததால் குடும்ப கஷ்டத்திற்காக விபச்சார தொழிலை நடத்திவந்தார்.

இந்நிலையில் இவரை ஒரு முறை காவல் துறையினர் ஐந்து நட்சத்திர விடுதியில் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். பின் அவரை 15 நாட்கள் விடுதியில் அடைத்து வைத்து பின் விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் நிலையை அறிந்து இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் ஸ்வேதா பாசு பிரபல இந்தி இயக்குனர் ரோஹித் மிட்டலை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நண்பராக இருந்த ரோஹித்திடம் ஸ்வேதா பாசு தான் முதல்முறையாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அதை அவரும் சில நாட்களை கழித்து ஏற்றுக்கொண்டாராம். குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டதால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்துகொண்டோம் என்று தெரிவித்தார்.