வட்டுக்கோட்டையில் 35 பவுண் களவு (படங்கள்)

வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றது என வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தொல்புரம், பிளவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிலேயே இன்று காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் இந்தத் திருட்டு இடம்பெற்றது.

கூட்டுக் குடும்பமாக 3 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் சந்தைக்குச் சென்றுள்ளார். ஏனையோர்  வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் எவரும் இல்லாதவேளை பார்த்து அங்கு புகுந்த கும்பல் ஒன்று 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளது.

சந்தைச் சென்றவர் வீடு திரும்பி வந்து பார்த்த போதே வீடுடைத்து திருட்டுப் போனமை தெரியவந்தது.

உடனடியாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, தொல்புரம் பகுதியில் இன்று காலை சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடியோர் அப்பகுதி இளைஞர்களால் துரத்தப்பட்டு தப்பித்தனர் என்று தெரிவித்தனர்.
Previous Post Next Post