மலேசியாவைச் சேர்ந்த 41 வயது நபர் 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டது, மலேசியாவில் பெரும் பூதாகர பிரச்சனையாக கிளம்பியுள்ளது.
Che Abdul Karim என்ற 41 வயது இஸ்லாமிய நபர் 11 வயது சிறுமியை தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு அவர் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் மலேசியாவில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியே மக்களுக்கே கோபத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே இரண்டு மனைவிகள் 6 குழந்தைகள் இருக்கும் நிலையில் இது இவருக்கு தேவையா? என்று பலரும் சமூகவலைத்தளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி இந்த திருமணத்திற்கு ஒத்துழைக்க கூடாது என்று எதிர்ப்பு குரல்களும் வந்தன.
ஆனால் Che Abdul Karim நான் அந்த சிறுமியின் பெற்றோரின் சம்மதத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் இன்னும் 5 ஆண்டுகள் அதாவது 16 வயது ஆகும் வரை அவருடைய பெற்றோருடனே இருப்பார் எனவும் கூறியுள்ளார்.
மலேசியாவில் 18 வயதுக்கும் குறைந்த பெண்களை திருமணம் செய்து கொள்வது குற்றம், ஆனால் இஸ்லாமிய சட்டத்தின் படி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 16 வயதாவது இருக்க வேண்டும், அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் sharia நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த விவகாரம் மலேசியாவில் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளதால், இது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமியிடம் கேட்ட போது, நான் Che Abdul Karim-ஐ விரும்புவதாகவும், அவர் ஒரு நல்ல மனிதன் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து கூறுகையில், என் மீது பலரும் கோபமாக இருக்கிறார்கள், எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாய் என்று, என்னை விரும்பும் நபரை நான் நேசிக்கிறேன், அவரை விவாகரத்து செய்யமாட்டேன்.
எனக்கு தெரியும் நான் ஒரு சிறுமி, ஆனால் அவரை எனக்கு வெகுநாட்களாக தெரியும். அவருடைய குழந்தைகள் என்னுடைய நண்பர்கள் நான் அவரை நேசிக்கிறேன், விட்டுத்தரமாட்டேன் என்று சிறுமி கூறியுள்ளார்.