நயன்தாராவின் தைரியத்தை புகழ்ந்து தள்ளிய முன்னணி ஹீரோயின்


நயன்தாரா தற்போது அஜித்திற்கு ஜோடியாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் மற்றொரு படத்திலும் நடிக்கிறார்.

மேலும் அவர் நடித்து முடித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கோகோ படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நடிகை சமந்தா ட்விட்டரில் புகழ்ந்துதள்ளியுள்ளார்.

"ட்ரைலர் outstanding , இந்த படத்தை காண காத்திருகிறேன். படக்குழு மற்றும் இப்படி ஒரு கதையில் நடித்த நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன்" என அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஒரு முன்னணி ஹீரோயின் மற்றொரு ஹீரோயினை பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post