பிரபல நடிகை அனுபமாவிற்கு ஏற்பட்ட சோகம், ரசிகர்கள் அதிர்ச்சி

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தை அடுத்து அவர் தனுஷ்க்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.



தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது. தெலுங்கில் தற்போது குரு பிரேமகோசம் படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தில் அவர் பிரகாஷ் ராஜ்க்கு மகளாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டாராம். இதனால் பதட்டமான படக்குழு அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

குளிர் காய்ச்சலும், ரத்த அழுத்தமும் இருந்ததால் அவருக்கு அப்படியாகிவிட்டதாம். சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post