கமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்

கமல்ஹாசன் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த முதல்படமான “கன்னியாகுமாரி” என்று படத்தில் ஜோடியாக ரிதா பாதுரி ( வயது 62 ) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி 70-களில் வெளியான ராஜா, ஜூலி, தில் வில் பியார் வியார் உட்பட சுமார் 70 இந்தி படங்களிலும், 90 வரை துணை நடிகையாகவும், குஜராத்தி படங்களிலும், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து திரையுலகத்தை வலம் வந்தவர்.

இவர் இந்தி சீரியல்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்னத்திரையினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடை பெறவுள்ளது.

அவரது இறப்பு இந்தி சின்னத்திரை உலகுக்கு பெரிய இழப்பு என்று டிவி நடிகர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post