என்னது மிஸ்டர்.பீன் இறந்துவிட்டாரா? வெளியான அதிர்ச்சிகர தகவல்கள்

உலகம் முழுவதும் உள்ள பிரபலமான கதாபாத்திரங்களில் மிஸ்டர்.பீன் கதாபாத்திரமும் ஒன்று. 1980, 90 ஆம் காலக்கட்டங்களில் இந்த கதாபாத்திரத்திற்கு அளவில்லா தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

இந்த மிஸ்டர்.பீன் கதாபாத்திரத்தில் நடித்தவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இந்நிலையில் 63 வயதை கடந்துள்ள ரோவன் அட்கின்சன் இறந்துவிட்டதாக நேற்று பரவலாக ஒர் செய்தி காணப்பட்டது. இதனை நம்பி பலரும் கவலையுற்றனர்.ஆனால் இந்த செய்தி வதந்தியாம், மேலும் இது சில ஆபத்தான வைரஸ்களை பரப்பவே சில விஷமிகளால் இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ்களால் பல கணினிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த மிஸ்டர்.பீன் இறப்பு வதந்தி பரவுவது இது இரண்டாவது முறையாகும்.
Previous Post Next Post