
தமிழில், புழல் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன், இவர் சமீபத்தில் வெளியான எக்ஸ் வீடியோஸ் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும், இவர் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்த, "பெங்களூர் நாட்கள்" திரைப்படத்தில் நடிகை ராய்லட்சுமியின் காதலராக நடித்தார்.

மேலும், நடிகர் அர்ஜுன் மற்ற நடிகர்களை போல நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக சினிமாவுக்கு வராமல், இவர் வேறு ஒரு சொந்த காரணத்திற்காக மட்டுமே சினிமாவிற்கு வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், இவர் தன்னுடன் பெங்களூர் நாட்கள் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ராய்லட்சுமியை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்டதாகவும், இவரது பயத்தை போக்கிய நடிகை ராய் லட்சுமி தைரியமாக கட்டி பிடிக்க சொன்னதாகவும் தெரிய வந்துள்ளது.