முல்லைத்தீவில் தேடுதல் வேட்டை – புலிச்சீருடை, வெடிபொருள்கள் மீட்பு!! (படங்கள்)

முல்லைத்தீவு சாலை பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்துள்ளதாக நம்ப்படும் இடம் ஒன்றில், மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்க அமைய நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்போது விடுதலைப்புலிகள் பாவித்த கனரக இயந்திர துப்பாக்கியின் தோட்டாக்கள், விடுதலைப் புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை வலைஞர்மடத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு இன்று தோண்டுத் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் குறித்த பகுதிக்கு நீதிமன்றம் சார்பானவர்கள் வருகை தராத காரணத்தால் தோண்டும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.Previous Post Next Post