யாஷிகாவிடம் முத்தம் கேட்ட மஹத்! கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை!விறுவிறுப்பின் உச்சத்தில் பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முதல் சீசனை போலவே வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். யாஷிகா மற்றும் மஹத்தின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.இன்று வெளியாகியுள்ள டீசரில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தண்ணீர் டேங்கில் இருந்து தண்ணீர் வெளியே செல்லாமல் கைகளால் மட்டுமே அடைக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த டாஸ்கில் மஹத் பங்கேற்று உள்ளார்.

அப்போது யாஷிகாவிடம் ஒரே ஒரு முத்தம் கொடு நான் கையை எடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். இதனால் மும்தாஜ் இப்படியெல்லாமா பேசுவாங்க என மஹத்திடம் சண்டை போட இனி நீங்க பார்க்கும் போதெல்லாம் இப்படி தான் செய்வேன் என கூறுகிறார்.

இதனால் இன்று பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.Previous Post Next Post