துருவ் படத்தில் கமிட்டான பிக்பாஸ் புகழ் ரைசா- நாயகியாக இல்லை அப்படி ஒரு விஷயத்துக்கு தான்

சியான் விக்ரம் என்றாலே ஸ்பெஷல் தான். எல்லா படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியை செய்துவிடுவார். அடுத்து இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.அதேசமயம் அவருடைய மகன் துருவ் நடிக்கும் வர்மா படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் தான் இருக்கிறது. பாலா ஸ்டைல் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும் துருவ் நடிப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

படத்தில் நாயகியாக ஸ்ரேயா ஷர்மா நாயகியாக நடிக்கிறார் என்று தினமும் செய்திகள் வருகின்றன, இது உண்மையா என்பது படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

அடுத்து படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகை பற்றி செய்திகள் வருகின்றன. அதாவது தமிழ் பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர் ரைசா இப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை படக்குழு அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.
Previous Post Next Post