ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தர தயார்: தமிழ் முன்னணி நடிகர் ஓபன் டாக்.!

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரையுலகில் பலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றசாட்டுகளை கூறி வந்த ஸ்ரீ ரெட்டி ராகவா லாரன்ஸ் மீதும் குற்றம் சாட்டி இருந்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றின் மூலமாக பதிலளித்துள்ளார். அந்த அறிக்கையில் நான் பெண்களை மதிப்பவன், என் அம்மாவிற்காக கோவில் கட்டியுள்ளேன். என் மீது வீண் பழி சுமத்தியிருப்பது ஏன் என தெரியவில்லை.


யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதால் இவ்வாறு செய்து வருகிறீர்கள் என்பது நீங்கள் கொடுத்து வரும் பேட்டிகளின் மூலம் தெரிகிறது. உங்களது நடிப்பு திறமையை நிரூபித்தால் என்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்க தயார். அதன் பின் மற்றவர்களும் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார்கள் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Previous Post Next Post