காதலில் விழுந்தேன் பட சுனைனாவா இது இவ்வளவு கொடூரமா மாறிட்டாரே,வெளிவந்த புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் நடிகை சுனைனா.மேலும் தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுனைனா.




இந்நிலையில் தற்போது சுனைனா நிலா நிலா ஓடி வா என்ற புதிய படத்தில் கொடூரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நந்தினி என்பவர் இயக்கும் இந்த புதிய படத்தில் அஸ்வின் டேட்டூ கலைஞராகவும், நடிக்க சுனைனா காட்டேரியாகவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்படத்தில் இருவரின் கதாபாத்திரத்தை வடிவமைத்து ஒரு ஃபஸ்ட் லுக் வந்துள்ளது.

Previous Post Next Post