அந்த நடிகருடன் நடித்ததால் என் வாழ்க்கை வீணானது! நடிகையின் கண்ணீர்

இந்திய சினிமா துறையில் ஹீரோக்கள் பல ஆண்டுகள் முன்னணியில் இருப்பார்கள், ஆனால் ஹீரோயின்களுக்கு சில வருடங்கள் மட்டுமே. அதுவும் திருமணமாமனால் கேரியர் முடிந்துவிடும்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் படத்தில் நடித்ததால் தன் வாழ்க்கை வீணாகிவிட்டது என பிரபல நடிகை Mahie Gill தெரிவித்துள்ளார்.தேவ் டி படத்தின் மூலம் பாப்புலர் ஆன அவர் சல்மான் கானின் தபாங் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். இந்த படத்தில் நடித்தபிறகு அவரை இயக்குனர்கள் அனைவரும் சிறிய வேடங்களில் நடிக்க மட்டுமே அணுகியுள்ளனர். அதுவரை ஹீரோயின் அளவுக்கு இருந்தவரின் கேரியர் சல்மான் கான் படத்தால் முடிந்துவிட்டது.

இந்நிலையில் அவர் தற்போது சஞ்சய் தத் நடித்துள்ள Saheb Biwi Aur Gangster 3 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துவருகிறார். இந்த படமாவது Mahie Gillக்கு உதவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Previous Post Next Post