ஆணாக மாறும் முடிவை கைவிட்ட பிரபல நடிகை..!

திருநம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை கைவிடுவதாக பிரபல பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கேர்லட் ஹோஹன்சன் தெரிவித்துள்ளார்.




தி அவெஞெர்ஸ், அவெஞெர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ், லூஸி, கோஸ்ட் இன் த ஷெல் போன்ற மிக பெரிய படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை ஸ்கேர்லட் ஜொஹன்சன் ஆவார். இவர் தற்போது பாடகியாகவும் மாறியுள்ளார். இவர் பாடிய "பேட் ட்ரீம்ஸ்" ஆல்பம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



இதையடுத்து, ஸ்கேர்லட் சமீபத்தில், ரூபெர்ட் சாண்டர்ஸ் இயக்கும் ரப் & டப் திரைப்படத்தில் திருநம்பியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அதற்கு மூன்றாம் பாலின அமைப்புகள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்கேர்லட் ஜோஹன்சன் இந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவர்கள் மனது புன்படும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டேன் எனவும் நடிகை ஸ்கேர்லட் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post