10 வயது மகளை படுக்கைக்கு அனுப்பிய தாய்…

கள்ளக்காதலனுக்கு தனது மகளை தாரைவார்த்த தாய் ஒருவரும் அவரின் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

38 வயதுடைய, தாய் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கட்டுநாயக்க ஊரகஹ பகுதியை சேர்ந்த குறித்த தாய்க்கு ஐந்து பிள்ளைகள்.

அப்பகுதியில் வசிக்கும் பிறிதொரு நபருடன் கள்ளத்தொடர்பினை பேணி வந்துள்ளார்.பின்னர் கள்ளக்காதலன் அவரின் 22 வயதுடைய நண்பர் ஒருவரை குறித்த தாய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அறிமுகம் செய்து வைத்த 22 வயதுடைய இளைஞருடனும் அந்த அம்மா கள்ளத்தொடர்பினை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.22 வயதுடைய இளைஞருடன் பல தடவைகள் விடுதிகளுக்கு சென்று வந்தன் விளைவாக இரண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

உத்தியோகபூர்மாக திருமணம் முடித்த கணவருக்கு மூன்று பிள்ளைகளும் 22 வயதுடைய இளைஞருக்கு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்ட தாய்… ஐந்து பிள்ளைகளுக்கு தாயானார்.

22 வயதுடைய இளைஞருடனான நட்பு மேலும் வளர்ச்சியடைந்தமையினால் குறித்த தாயின் 10 வயதுடைய மகளுடன் உடலுறவு கொள்ள அந்த இளைஞர் விருப்பம் தெரிவித்துள்ளார்.அவரின் கோரிக்கைக்கு குறித்த தாய் இணக்கம் தெரிவித்ததோடு தன்னை அழைத்து சென்ற அறைக்கே தனது மகளையும் அழைத்து செல்லுமாறு அந்த இளைஞரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தாய் தான் சென்ற அறைக்கே தனது மகளை அழைத்து சென்று கள்ளக்காதலனான அந்த இளைஞர் வருகை தந்ததும் மகளை அறையில் இருக்குமாறு கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் குறித்த இளைஞர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு சிறுமியை சீரழித்துவிட்டு சிறுமியை தாயிடம் ஒப்படைத்து விட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அழுதுகொண்டிருந்த சிறுமியை அச்சுறுத்திய தாய் இந்த விடயத்தினை யாரிடமும் கூறவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தாயின் கோரிக்கைக்கு இணங்கிய சிறுமி சிறிது காலம் சென்றதும் தாய் வீட்டில் இல்லாத சந்தர்த்தர்ப்பத்தில் அயல் வீட்டில் வசிக்கும் சிலரிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமையை விபரித்துள்ளார்.இந்த தகவலை அவர்கள் காவல் நிலையத்தில் தெரிவித்ததும் காவல் துறையினரால் 22 வயதுடைய இளைஞர் மற்றும் 38 வயதுடைய தாய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post