கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வழமைப்போன்று குறித்த பகுதியில் விளையாடுவதாகவும், இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் சகோதரிகள் தாயாரிடம் தெரிவித்தபோது தாயார் குறித்த சிறுவனை பாதுகாக்க முற்பட்டார்.
எனினும் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இக் குடும்பம் இறந்த நிகழ்வை செய்வதற்குக் கூட வசதியற்ற நிலையில் இறந்த சிறுவனது உடலை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் ஊரவர்கள் சேர்ந்து அங்கிருக்கும் பலகைகளைக் கொண்டு சவப்பெட்டி தயாரிக்கும் நிலையில் உள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமைப்போன்று குறித்த பகுதியில் விளையாடுவதாகவும், இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் சகோதரிகள் தாயாரிடம் தெரிவித்தபோது தாயார் குறித்த சிறுவனை பாதுகாக்க முற்பட்டார்.
எனினும் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.