திருமணமான நபரிடம் சிக்கிய 13 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம்….!!

நுகோகொடை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான பருமடைந்த சிறுமியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியை சிலாபம் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 37 வயதான திருமணமான நபரை மிரிஹான பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.

தனது மகள் வீட்டில் இருந்து காணாமல் போனதாகவும் திருமணமான ஒருவருடன் சென்றுள்ளதாகவும் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி சிறுமியின் தாய் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


இந்த முறைப்பாடு தொடர்பாக துரிதமான விசாரணைகளை நடத்தவில்லை எனக் கூறி, சிறுமியின் தந்தை, மேல் மாகாணம் தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, மிரிஹான பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

நீண்ட விசாரணைகளின் பின்னர், சந்தேக நபரும், சிறுமியும் சிலாபம், இழுப்படி பிரதேசத்தில் உள்ள சீமெந்து புளொக் கற்களை உற்பத்தி செய்யும் இடத்தில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரிடம் நடத்திய விசாரணைகளை அடுத்து, சிறுமி சற்று தொலைவில் சிறிய வீடொன்றில் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், சிறுமியை தனது மனைவி என புளொக் கற்களை உற்பத்தி செய்யும் நிலையத்தின் உரிமையாளரிடம் அறிமுகப்படுத்தி, அங்கு தொழில் செய்ய அனுமதி கேட்டு, தங்கியிருந்து தொழில் புரிந்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் ஆண் பிள்ளை இருப்பதுடன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post