15 வயசு.. மாமன் மகள் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த அத்தை.. மூச்சை நிறுத்திய சிறுவன்!

சென்னை: 15 வயசு பையனுக்கு என்ன தெரிய போகுதுன்னு நாம நினைக்கிறோம். ஆனா இவர்களில் சிலர் பெரியவங்களவிட மிஞ்சி போயிடறாங்க. அப்படித்தான் ஒரு 15 வயசு பையன் லவ் பண்றான்.. இவன் கொலை செய்து சிக்கியும் உள்ளான்.





காதலுக்கு போதிய வயசு இல்லை. இதை சுட்டிக்காட்டித் தட்டி கேட்டார் என்பதற்காக சொந்த அத்தையையே போட்டுத் தள்ளி விட்டான் இந்த பையன்.

அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதி சங்கரசுப்பு -தமிழ்ச்செல்வி. சங்கரசுப்பு தன் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மளிகை கடை வைத்துள்ளார். வயது 44. தமிழ்ச்செல்விக்கு வயது 35. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 கை தேர்ந்த கொலையாளி?



இந்நிலையில் கடந்த 2-ம் தேதி தமிழ்செல்வி வீட்டில் சடலமாக கிடந்தார். அதுவும் மிக கொடூரமான நிலையில் இருந்தார். அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டிருந்தது. இதனால் பயங்கரமான ஒரு தேர்ந்த கொலையாளிதான் இதை செய்திருக்க கூடும் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

 
சிக்கிய 15 வயது சிறுவன்
அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் விட்டுவைக்காமல் ஆய்வு நடவடிக்கையில் அதிரடியாக இறங்கினர். கடைசியில் பார்த்தால், 15 வயது சிறுவன் தமிழ்ச்செல்வியை கொலை செய்தது அந்த காமிராவில் தெரியவந்தது. அந்த சிறுவன் யார் என்றால் தமிழ்ச்செல்வியின் உறவுக்காரரின் மகனாம். கொலைக்கு என்ன காரணம் என்றால், தமிழ்ச்செல்வியின் மகளை 15 வயது சிறுவன் காதலித்து உள்ளார் (சிறுவனுக்கு தமிழ்ச்செல்வி அத்தை முறையாம்).

 சிறுவன் கைது



அந்த காதல் தமிழ்ச்செல்விக்கு தெரியவந்ததால் சிறுவனை கண்டித்துள்ளார். அதனால் சிறுவனுக்கு ரோஷம் கொப்பளித்து, ஆத்திரம் அதிகமாகி, இப்படி கொடூரமான கொலையில் முடிந்திருக்கிறது. இப்போது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


குட்டிச்சுவராக்கும் சமூகவலைதளம்
எல்லாம் இந்த டி.வி.யும், சமூகவலைதளங்களும் படுத்தற பாடுதான் இப்படி வன்முறையாக வெடித்து கிளம்புகிறது. இன்றைய பெருமளவு குழந்தைகளையும், மாணவர்களையும், மனதளவில் கெடுத்து குட்டிச்சுவராக்குவது அளவுக்கதிகமாக அலைபாய்ந்துகொண்டிருக்கும் ஆபாசதளங்களே. எனவே இளைய சமுதாயத்தை கெடுத்து சூறையாடி கொண்டிருக்கும் ஆபாசதளங்கள் மற்றும் வக்கரிக்கும் சினிமா, தொலைக்காட்சியின் எல்லைமீறிய காட்சிகளை தடுத்து நிறுத்த உடனடியாக அரசு முன் வரவேண்டும்.
Previous Post Next Post