கர்ப்பிணி மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்த தந்தை !!!

 அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொலை செய்த தந்தை, 4 நாட்கள் கச்சா எண்ணை டேங்கில் அவர்களின் உடல்களை மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் Colorado நகரை சேர்ந்தவர் Christopher Watts (33). 5 மாத கர்ப்பிணியான இவரது மனைவி Shanann Watts (34), தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு Bella (4), Celeste (3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக பணி காரணமாக Arizona மாகாணத்திற்கு சென்றிருந்த Shanann திங்கட்கிழமையன்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஆனால் வீட்டில் Shanann மற்றும் குழந்தைகள் இருவரும் இல்லை, எங்கே சென்றார்கள் என தெரியவில்லை என Christopher பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டிருக்க, Christopher தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அதில், என்னுடைய மனைவி மற்றும் மகள்கள் எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை, அவர்கள் எங்கிருந்தாலும் திரும்பி வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். யாரேனும் அவர்களை பார்த்தால் எனக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிடையில் தீவிரமான விசாரணை நடத்தி வந்த பொலிஸார், Christopher பணிபுரிந்து வரும் இடத்தில் உள்ள கச்சா எண்ணெய் டேங்கில் Shanann-ன் உடலை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலே அங்கிருந்த மற்றொரு எண்ணெய் டேங்கில் குழந்தைகளின் உடல்களை பொலிஸார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து Christopher-ஐ கைது செய்த பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தம்பதியின் வாழ்க்கை குறித்து உறவினர்கள் கூறுகையில்,

Christopher-க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அதனால் தான் மூன்று பேரையும் கொலை செய்துள்ளார் என ஒரு தரப்பும், வேறு சிலர், Christopher-க்கு Shanann மீது பாசம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Shanann கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய முகநூல் பக்கத்தில் தான் கர்ப்பமடைந்திருப்பது பற்றி பதிவிட்டிருந்தார்.

அதில், "வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் Christopher-ஐ காதலிக்கிறேன். அவர் என்னுடைய குழந்தைகளுக்கு அருமையான ஒரு தந்தை" எனவும் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post