மகன் மீதான அதீத நம்பிக்கை : மகனின் கைபேசியில் 300 ஆபாச வீடியோக்களை கண்டு மயங்கி விழுந்தத் தாய்

மகனின் கைத்­தொ­லை­பே­சியில் காணப்­பட்ட ஆபாச காணொ­ளி­களைப் பார்த்த தாய் அதிர்ச்­சியில் மயக்­க­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் பொலன்­ன­றுவை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

பொல­ன்ன­று­வை­யி­லுள்ள பாட­சாலை ஒன்றின் உயர்­தர வகுப்பு மாண­வ­ரொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர் கைத்­தொ­லை­பே­சி­யை கைப்­பற்றி சோத­னை­யிட்­ட­போது, அதில் சுமார் 300 க்கும் மேற்­பட்ட ஆபாச காணொ­ளிகள் சேமிக்­கப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.இத­னை­ய­டுத்து, பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர், மேற்­படி மாண­வனின் தாயாரை பாட­சா­லைக்கு வர­வ­ழைத்து அவ­ரது மகனின் செயற்­பா­டுகள் குறித்து தெரி­வித்­துள்­ளனர்.

அதன்­போது, குறித்த மாணவனின் தாயார், தனது மகன் மிகவும் கீழ்ப்­ப­டி­வா­னவர் எனவும் அவர் அவ்­வா­றான காரி­யங்­களை செய்­தி­ருக்­க­வாய்ப்­பில்லை எனவும் கூறி, மகன் மீதான குற்­றச்­சாட்டை மறுத்­துள்ளார்.

அதன்­போது, குறித்த மாண­வ­னி­ட­மி­ருந்து கைப்­பற்­றிய கைத்­தொ­லை­பே­சியை பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர், அவ­ரது தாயிடம் கொடுத்­துள்ள நிலையில், அவர் அதில் காணப்­பட்ட ஆபாசப் படக் காணொளிகளைக் கண்டு அல்­லது தனது மகனின் நடத்தை குறித்த அதிர்ச்­சியில் மயக்­க­ம­டைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து, ஆசி­ரி­யர்கள் அவ­ருக்கு முத­லு­தவி செய்தும் பய­ன­ளிக்­கா­மை­யினால் அவரை பொலன்­ன­றுவை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­த­துடன், வைத்­தி­யர்­களின் ஊடாக இவ்­வி­டயம் தொடர்பில் வைத்­தி­ய­சாலை பொலிஸ் பிரி­வுக்கு அறி­விக்கப்பட்­டுள்­ளது.

பின்னர், மாண­வனின் தாய் மயக்­கத்­தி­லி­ருந்து தெளிந்­த­தை­ய­டுத்து பொலிஸார் அவ­ரிடம் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­த­போது, தனது கைத்­தொ­லை­பே­சி­யி­லி­ருந்தே மகன் குறித்த காணொ­ளி­களை பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

தாயையும், மக­னையும் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் முன்­னி­லையில் வைத்­தி­ய­சாலை பொலிஸார் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட அதே­வேளை, ஆபாசக் காணொளி அடங்­கிய மெமரி கார்­டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Previous Post Next Post