திருமணமாகி 35 நாளில் குழந்தை பெற்ற மகள்! அவமானத்தில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை!!

திருமணமாகி 35 நாளில் குழந்தை பெற்றுக் கொண்டாரா மகளால், அவமானம் தாங்க முடியாமல், தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகிலுள்ள, தருமத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பெரியமுத்து என்னும் இளைஞர் (வயது 28), சென்னை கோயம்பேட்டில் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் போன மாதம் 1- ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு பெரியமுத்து சென்னைக்கு சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெரியமுத்து மனைவியை பார்க்க தருமத்துப்பட்டிக்கு வந்துள்ளார். இரவில், அவரது மனைவிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக  பெரியமுத்து  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.



அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவர் பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்டார். சிறிது நேரத்திலேயே அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

குழந்தை பிறந்தாய் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் பெரியமுத்து. அதன் பின் பெண்ணின் பெற்றோர்க்கு தகவலை கூறியுள்ளார். உங்கள் மகளுடன் வாழ முடியாது என்று கூறி விட்டு சென்றுள்ளார்.



35 நாட்களில் குழந்தை பெற்றதால் மகளின் வாழ்க்கை கேள்வி கூறியது, மனம் உடைந்த பெண்ணின்  தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post