6 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த காம கொடூரன்- பள்ளியில் ஏற்பட்ட கலவரம்!

டெல்லியில் 2-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளியின் எலக்ட்ரீசியனை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நேற்று டெல்லி முனிசிபல் கவுன்சில் பள்ளியொன்றில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 2 ம் வகுப்பு மாணவி தமக்கு நேர்ந்தது குறித்து தமது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.


இது தொடர்பாக பாடசாலையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சிறுமியை வைத்து அந்த நபரை அடையாளம் காட்டச்செய்தனர். அதன்பேரில் ராம் அஸ்ரே ((Ram Asre)) என்ற அந்த நபரை கைது செய்த பொலிசார், அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பள்ளியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் குறித்த நபரிற்கு எதிராக பதிவிடப்பட்டு, இச்சம்பவம் வைரலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post