உடல் நிலை சரியில்லாமல் இறந்த 7 மாத குழந்தை! இறுதிச் சடங்கின் போது உயிரோடு வந்த அதிசயம்: நடந்தது என்ன?

மத்திய அமெரிக்காவில் இறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்த போது, அந்த குழந்தை உயிரோடு இருந்ததால், தாய் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

மத்திய அமெரிக்காவின் Honduras பகுதியில் உள்ள San Pedro Sula-வைச் சேர்ந்தவர் Ivis Montoya. இவருடைய 7 மாத குழந்தையான Keilin Johanna Ortiz Montoya-விற்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக Villanueva பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு தன்னுடைய ஏழு மாத குழந்தையை கடந்த 3-ஆம் திகதி அனுமதித்துள்ளார்.

இதனால் குழந்தைக்கு அங்கிருக்கும் ஐசியூ வார்டில் தொடர்ந்து நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. .

இந்நிலையில் 6-ஆம் திகதி குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


இதற்கிடையில் குழந்தையை கையில் வைத்த படி Ivis Montoya உட்கார்ந்திருந்த போது, குழந்தை திடீரென்று மூச்சுவிட்டுள்ளது, இதை அறிந்த அவர் உடனடியாக உறவினர்களிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு தற்போது குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குழந்தை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை இறந்ததாக அறிவித்த, மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு என்ன பிரச்சனை இருந்தது? எதன் காரணமாக நான்கு நாட்கள் ஐசியூ வார்டில் வைக்கப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.
Previous Post Next Post