இதைப்பார்த்தவுடன் யாரும் ஷாக் ஆகிவிட வேண்டாம்…

நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் மாத்திரம் (27 நாட்களுக்கு மாத்திரம்) ஆலய சூழலில் கடைகள் அமைப்பதற்கு, ஆலய சூழலில் உள்ள வீதியோரங்களில் உள்ள பத்து சதுர அடி நிலம் மாத்திரம் யாழ்.மாநகர சபையால் குத்தகைக்கு விடப்படுவதற்கான கேள்வித்தொகைகள்
கீழுள்ள படங்கள் கடைகளின் அமைவிடமும் அதன் ஆரம்ப கேள்வித்தொகையுமே ……

ஒரு கடைக்கான குறைந்த ஆரம்ப கேள்வித்தொகை 10ஆயிரம் ரூபா.
மணிக்கடைகளின் ஆரம்ப கேள்வித்தொகை 99 ஆயிரத்து 200 ரூபா.
இனிப்பு கடைகளின் ஆரம்ப கேள்வித்தொகை 01 இலட்சத்து 61 ஆயிரத்து 450 ரூபா.
தியாகதீபம் திலீபனின் நினைவிடத்திற்கு எதிர்ப்பக்கம் கடை அமைப்பதற்கு 10 சதுர அடி வெறும் நிலம் மாத்திரம் ஆரம்ப கேள்வித்தொகை 01 லட்சத்து 90 ஆயிரத்து 580 ரூபா.

லிங்கம் கிறீம் ஹவுஸ்க்கு பின்னால் யாழ்.மாநகர சபையின் பொது கழிப்பிடம் உள்ளது. அதற்கு முன்னால் 10 க்கு 20 அடி நிலம் மாத்திரம் ஆரம்ப கேள்வித்தொகை (தற்காலிக தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு) 03 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா.

அத்துடன் தெரிவான கடைகளின் தொகைக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி உள்ளடங்கலாக வரிகளும் அறவிடப்படும். (உதாரணமாக 50 ஆயிரம் ரூபாவிற்கு கடை ஒன்றை எடுத்தால், 8ஆயிரத்து 650 ரூபா வரி வரும். ஆக மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை 58 ஆயிரத்து 650 ரூபாய்)

இது தவிர கேள்வி பத்திரம் எடுக்க 2 ஆயிரத்து 583 ரூபா, அதில் 2ஆயிரம் ரூபாய் வியாபாரிகளுக்கு திருப்ப செலுத்தப்படும்.