முன்னாள் காதலியை அவளது தோழியின் கண் முன்னே சுட்டுக்கொன்ற காதலன்

தாய்லாந்தில் தனது முன்னாள் காதலியை அவளது தோழியின் கண் முன்னே ஒருவர் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Pukkapong Chittarom என்னும் அந்த நபர் அந்தப் பெண்ணை நான்கைந்து வருடங்களாகக் காதலித்துள்ளான்.

Natchareeya என்னும் அந்தப் பெண் பின்னர் அவனது காதலை முறித்துக் கொண்டாள், அவனோடு அதற்குப் பின் அவள் பழக விரும்பவும் இல்லை.மூன்றாமாண்டு கல்லூரி மாணவியான Natchareeya தனது தோழியுடன் வகுப்புக்கு செல்வதற்காக செல்லும்போது தனது முன்னாள் காதலனைக் கண்டதும் நின்றிருக்கிறாள்.
அவன் அவளுடன் பேச முயல அவளோ பேச மறுத்து தொடந்து நடக்க முயன்றிருக்கிறாள்.

அப்போது துப்பாக்கியை எடுத்து அவன் Natchareeyaவை நெஞ்சில் சுட்டிருக்கிறான், Natchareeya அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறக்க அவளது தோழி பயந்து ஓடியிருக்கிறாள்.

அவளது அருகில் சென்ற Pukkapong அவளைக் கட்டியணைத்திருக்கிறான்.அவள் இறந்து விட்டாள் என்பது தெரிந்ததும் துப்பாக்கியை வாய்க்குள் வைத்து அவனும் தன்னையே சுட்டுக் கொண்டான். ஆனால் துரதிஷ்டவசமாக குண்டு அவனது கன்னம் வழியே வெளியேற அவன் உயிர் பிழைத்துவிட்டான்.

அவன் சர்வ சாதரணமாக தனது முன்னாள் காதலியை சுட்டுக் கொல்லும் காட்சிகள் CCTVகெமராவில் பதிவாகியுள்ளன, அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ள பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post