இலங்கையில் பெண் சிறை கைதிகள் செய்த காரியம்!

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி, பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 10 பெண்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





இன்று (13) காலை 8 மணி முதல், கூரை மீதேறி குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்று முன்தினம் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது.

கைதிகளுக்கு வெளியே இருந்து கொண்டுவரப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டது.

வெளியே உணவு பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பெண்கள் உரிய அளவை விடவும் அதிகளவு உணவு பெற்றுக் கொள்வதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



அதன் ஊடாக தடை செய்யப்பட்ட பொருட்கள் வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவிற்கு கிடைக்க கூடும் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தடுத்தமையினால் பெண் கைதிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post