கொழும்பில் மனைவிக்கு கணவன் செய்த காரியம்!

கொழும்பில் பெண்ணொருவர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு-02, கொம்பனி வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ​சுத்திகரிப்பு வேலைச்செய்யும் பெண்ணே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கத்தியால் குத்தியதாகக் கூறப்பம் அப்பெண்ணின் கணவனை​ கைதுசெய்துள்ளதாக கொம்பனிவீதி பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்தே, இந்தச் சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், மதவாச்சியை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான, பெண்ணொருவ​ரே காயங்களுக்கு உள்ளானார்.

அப்பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனரென, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

அந்தப்பெண், தவறான தொடர்பை ஏற்படுத்தியிருந்தார் என்றடிப்படையிலேயே, அப்பெண்ணின் கணவன், கத்தியால் குத்தியுள்ளதாக விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  
Previous Post Next Post