வவுனியாவில் நெடுநாளாக மேற்கொள்ளப்பட்ட இறைச்சி கடத்தல் கும்பல் கைது! (படங்கள்)

வவுனியாவில் பல நாட்களாக நடைபெற்ற மான்,மரை இறைச்சி கடத்தல் வியாபாரம் பொலிஸாரால் முறியடிப்புஇச்சம்பவம் பற்றி அறியவருவதாவது

வவுனியா பொலிஸாரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ்நிலையங்களிலும்,உணவகங்களிலும் கழிவு பொருட்களை சேகரிக்கும் கப் ரக வண்டியில் நெடுநாட்களாக மான் மற்றும் மரை இறைச்சிகளை சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டு வந்த கும்பலினை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

குறித்த கப் வண்டியில் 30கிலோ எடையுடைய மரை இறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர் மேலும் குறித்த வாகனத்தையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்

விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா பொலிஸார இறைச்சியையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்Previous Post Next Post